ஒரு தேசம்... ஒரு சலான்! போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு

தினமலர்  தினமலர்
ஒரு தேசம்... ஒரு சலான்! போக்குவரத்து விதிமீறல்களுக்கு தீர்வு

கோவை:'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் வாயிலாக, அபராதத்தை போலீசாரிடம் ஆன்லைனில் செலுத்தலாம். சலான் பெற்று பிற்பாடு செலுத்த தவறுவோர், பிற்பாடு வாகனத்தை விற்கும்போதோ, உரிமம் புதுப்பிக்கும்போதோ சிக்கிக்கொள்வர்.
நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு, போக்குவரத்து விதிகளை மீறுதல், அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களே காரணம். இதைக்கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க, பல்வேறு நடைமுறைகள் வகுக்கப்பட்டன.
இருப்பினும், அபராதம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.இதைக்கருத்தில் கொண்டு, இ - சலான் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இம்முறையிலும், அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைக்கருத்தில் கொண்டு, 'ஒரு தேசம்; ஒரு சலான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எங்கிருந்தும், ஆன்-லைன் முறையில், அபராதம் செலுத்தலாம்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:சாலை விதிகளை மீறுவோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பவ இடத்தில் ஆன்-லைன் பேங்கிங் முறை அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு முறையில் பணத்தை, இ-சலான் இயந்திரத்தின் மூலம் செலுத்தலாம்.
இது தவிர, இ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.
இதன் மூலம், போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படும் பிரச்னைகள் தவிர்க்கப்படும். அனைத்து நடைமுறைகளும், ஆன்லைன் முறை என்பதால், பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பில்லை.இத்திட்டத்தை செயல்படுத்த, கோவை மாநகர போலீசாருக்கு, 32 இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 17 கருவிகள் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இ-சலானை பெற்றுக் கொண்டு, வங்கியிலும் செலுத்தலாம். இந்நடைமுறைகள் அனைத்தும், வாகன உரிமையாளர் விபரத்தில் இணைக்கப்படும். அபராதத்தை செலுத்தாமல், செல்லும் நபர்கள், பிற்பாடு வாகனத்தை பிறருக்கு விற்கும் போதோ, உரிமம் புதுப்பிக்கும் போதோ, நிலுவை அபராதத்தை செலுத்தியாக வேண்டும்.

மூலக்கதை