இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
இலங்கையில் அவசரநிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து பல முறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதற்கான உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார்.

மூலக்கதை