தந்தத்துக்காகத் தலை வெட்டப்பட்ட யானை: கொடூரம் உணர்த்தும் படம்

தினமலர்  தினமலர்
தந்தத்துக்காகத் தலை வெட்டப்பட்ட யானை: கொடூரம் உணர்த்தும் படம்

போட்ஸ்வானா:ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் தந்தத்திற்காக தலை துண்டிக்கப்பட்ட யானையின் படம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக விலங்குகளை வேட்டையாடப்படுகின்றன. போட்ஸ்வானாவில் யானை ஒன்று தந்தத்திற்காக கொடூரமாக தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சியை புகைப்படக் கலைஞர் ஜஸ்டின் சலைவன் தனது கிரேன் மூலம் பதிவு செய்துள்ளார். இதில் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை தலை வெட்டப்பட்டுப் இறந்து கிடக்கும் காட்சியை ஜஸ்டின் படமாக எடுத்திருக்கிறார் .விலங்கு நல ஆர்வலர்களிடம் இந்த படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஒரு ஆண்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டன.ஜஸ்டினின் எடுத்த இந்தம் பலராலும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. அத்துடன் விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருகின்றனர்.

மூலக்கதை