'இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான்' : நடுவர் தர்மசேனா ஒப்புதல்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துக்கு ஒரு ரன் கூடுதலாக அளித்தது தவறுதான் : நடுவர் தர்மசேனா ஒப்புதல்

லண்டன் : உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான் என்று ஆட்டத்தின் நடுவர் தர்மசேனா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். லாக்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி ஆட்டத்தின் போது குப்தில் ஓவர் த்ரோ செய்த பந்து, ரன் எடுக்க ஓடிய ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றுவிட்டது. அப்போது தர்மசேனா வீரர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து மொத்தம் 6 ரன்கள் வழங்கினார். ஆனால் குப்தில் பந்தை எரிந்த போது ரஷீதும், ஸ்டோக்ஸ்-ம் இரண்டாவது ரன்னை முழுமை செய்யாதது ரீப்ளேவில் தெரியவந்தது. இதனை கவனிக்காத தர்மசேனா 1 ரன் கூடுதலாக அளித்துவிட்டார். இது இங்கிலாந்து வெற்றிபெற சாதகமாகிவிட்டது. நடுவர் தர்மசேனாவின் இந்த முடிவு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தனது தவறை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் தவறு தெரிய வந்ததாக என்று பேட்டி அளித்தார். ஆனால் அதனை எண்ணி வருந்தவிலை என்று கூறியுள்ள இலங்கையை சேர்ந்த நடுவர் தர்மசேனா, தமது தீர்ப்பை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

மூலக்கதை