ஊழல் செய்த அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கொல்ல வேண்டும் : காஷ்மீர் ஆளுநர் மாலிக் பேச்சால் சர்ச்சை

தினகரன்  தினகரன்
ஊழல் செய்த அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கொல்ல வேண்டும் : காஷ்மீர் ஆளுநர் மாலிக் பேச்சால் சர்ச்சை

ஸ்ரீநகர் : காஷ்மீரை கொள்ளையடித்த லஞ்ச பேர்வழிகளை தீவிரவாதிகள் கொலை செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கார்கிலில் நடந்த சுற்றுலாவை மேம்படுத்தும்  விழாவை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் சத்ய பால் மாலிக், லஞ்சம் தான் நாட்டின் பெருநோயாக உள்ளது என்றார். நமது நாட்டில் அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் தீவிரவாதிகள் ஏன் கொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய மாலிக், அதற்கு பதில் காஷ்மீர் வளங்களை கொள்ளையடித்த லஞ்ச பேர்வழிகளை கொலை செய்ய வேண்டியது தானே என்றார். துப்பாக்கியால் அரசை பணியவைக்க வேண்டும் என தீவிரவாதிகள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்று மாலிக் கூறினார். துப்பாக்கி ஏந்தி இளைஞர்கள் தங்களின் வாழ்வை இழக்க வேண்டாம் என்றும் சத்ய பால் மாலிக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் சத்ய பால் மாலிகின் பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ இனி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் ஆளுநரின் உத்தரவை கேட்டே அவர்கள் அவ்வாறு செய்ததாக கருதப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை