8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? : உச்சநீதிமன்றம் கேள்வி

தினகரன்  தினகரன்
8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே? : உச்சநீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே சுற்றுசூழல் அனுமதி பெறாமல் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு அரசாணையை வெளியிட்டது. இந்த திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மக்களின் இந்த எதிர்ப்புகளையும் மீறி தமிழக அரசு நில அளவீட்டை தொடங்கி கல் நடும் பணிகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து சென்னை முதல் சேலம் வரையில் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் தடை மேலும், இந்த திட்டத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய வனங்கள் அழிக்கப்படுவதாகவும் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஆர்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. இதை தவிர இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் ஆணையத்தின் ஒப்புதலும் பெறவில்லை. அதனால் மேற்கண்ட சட்ட விதிமீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது,\'என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது  : உச்சநீதிமன்றம் இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது. என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஜூலை 31-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் : உச்சநீதிமன்றம் இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு : தேசிய நெடுஞ்சாலைத்துறை : 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது, ஆனால் இப்பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுதேசிய நெடுஞ்சாலைத்துறை : நிலம் கையகப்படுவதற்கான அனுமதியை மட்டும் வழங்குகள். நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுசூழல் அனுமதியை பெற முடியாது.நீதிபதிகள் : நிலம் கையகப்படுத்துவதற்கான உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது. நீதிபதிகள் : எத்தனை பேர் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள்.நீதிபதிகள் : எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கும் போது, இத்திட்டத்தை வேறு மாநிலத்தில் செயல்படுத்தலாமே?தேசிய நெடுஞ்சாலைத்துறை : சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்நீதிபதிகள் : சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரத்தில் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாட்டை கூற வேண்டும். மத்திய அரசின் வாக்குறுதியை நாளை காலைக்குள் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.  நீதிபதிகள் : நிலம் கையகப்படுத்துவது பற்றி மத்திய அரசின் கோரிக்கை மீது ஜூலை 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். இதையடுத்து இவ்வழக்கு ஜுலே 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை