நிலவில் மனிதன் காலடி; பொன்விழா கொண்டாட்டம்

தினமலர்  தினமலர்
நிலவில் மனிதன் காலடி; பொன்விழா கொண்டாட்டம்

புதுடில்லி: நிலவில் மனிதனின் காலடி பதித்த, 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


அப்பல்லோ 11 விண்கலத்தின் மூலம் நிலவில் முதலில் காலடி பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது உடன் சென்ற புஸ் ஆல்டிரின் , மைக்கேல் கொலின்ஸ்ஸின் பயணம் அறிவியல் விண்வெளி வரலாற்றில் முக்கியமானது. நிலாவில் மனிதன் காலடி வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை நாசா சிறப்பாக கொண்டாடுகிறது.


1969 ம் ஆண்டு ஜூலை 20 ல் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மனிதர்களுடன் புறப்பட்ட அப்பல்லோ 11 விண்கலம், நிலவை சென்றடைந்தது. நிலவில் மனிதன் வாழ சில ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டது.


நிலவில் 50 ஆண்டுகளுக்கு முன்னும் வீரர்கள் செல்வதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நாசா செய்தது. டிஜிட்டல் இமேஜ் பிராசசிங் மூலம் நிலவின் புறப்பறப்பினை ஆய்வு செய்து புகைப்படங்களை எடுத்தது.


நிலவில் வெறும் காலால் நடக்கமுடியாது என்பதால் விண்வெளி வீரர்களுக்கு நாசா, தடகள வீரர்கள் பயன்படுத்துவது போன்ற ஷூக்களையே வழங்கியது. இதன் மூலம் முதலில் பதித்த காலடி தடங்களின் புகைப்படங்களை எடுத்து அதனையே ஆராய்ச்சியின் வெற்றியாக கருதுகிறது.


நிலவில் லூனார் கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்டிராங்கின் குழுவினர் காற்றின் வேகம், புவியின் தொலைவு மற்றும் சில முக்கிய ஆராய்ச்சிகளை செய்தனர். நிலவில் முதலாக நடப்பட்ட கொடி என்ற பெருமையை அமெரிக்கா தட்டிச் சென்றது. நிலவில் முதலாக காலடி வைத்த பெருமை, நீல் ஆம்ஸ்டிராங்குக்கு கிடைத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு, உலகம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூலக்கதை