இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து

தினகரன்  தினகரன்
இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் வெள்ளி வென்றார் சிந்து

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் போராடித் தோற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியுடன் நேற்று மோதிய சிந்து 15-1 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் யாமகுச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய அவர் 15-1, 16-1 என்ற நேர் செட்களில் தோற்று வது இடத்துடன் திருப்தி அடைந்தார். இப்போட்டி 51 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. யாமகுச்சியுடன் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் 10-4 என முன்னிலை வகித்ததுடன், கடைசியாக விளையாடிய 4 முறையும் வெற்றியை வசப்படுத்தி இருந்ததால் இம்முறையும் சிந்துவே வெற்றி பெறுவார் என ஆவலுடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, தாய்லாந்து ஓபன், இந்தியா ஓபன் என முக்கியமான தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சிந்து, துரதிர்ஷ்டவசமாக வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை