சவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
சவுதி சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பல் விடுவிப்பு

டெஹ்ரான்: மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா விடுவித்துள்ளது.சூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலான `ஹேப்பினஸ் 1’, கடந்த ஏப்ரல் 30ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில், இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து நின்றது. இந்த கப்பல் சவுதி அரேபியா கடலோர காவல்படையினரால் கடந்த மே ம் தேதி சிறை பிடிக்கப்பட்டது. இதன் பராமரிப்பு செலவாக ஈரான் நாளொன்றுக்கு ₹ 1.38 கோடி அளிக்க சவுதி வலியுறுத்தியது. இந்நிலையில், ஏறக்குறைய சிறைபிடிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் எண்ணெய் கப்பலை சவுதி விடுவித்தது. இது தொடர்பாக ஈரான் போக்குவரத்துத் துறை அமைச்சர் முகமது இஸ்லாமி கூறுகையில், ``சவுதியுடனான பேச்சுக்கு பின்னர் எண்ணெய் கப்பல் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அது பெர்சியன் வளைகுடாவை கடந்துள்ளது,’’ என்றார்.

மூலக்கதை