பா.ஜ.க- வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பா.ஜ.க வில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம்: பாரதிய ஜனதாவில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாடினார். 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவில் பிற கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் சேர்வது தொடர்கிறது. தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; ஜனதாவில் சேருமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாடினார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவில் சேர்வதற்கு 2 கோடி ரூபாய் பணமும்,  ஒரு பெட்ரோல் பங்கும் வழங்கப்படுவதாக சாடினார்.  பா.ஜனதாவில் இணையவில்லை என்றால் நிதி மோசடி வழக்கில் சிக்க வைக்கப்படுவீர்கள் என மிரட்டப்படுகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்க முயற்சி செய்கிறது. பா.ஜனதா ஒரு விசித்திரமான முறையில் செயல்பட்டு வருகிறது. அதன் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அவர்கள் எந்த முன் தகவலும் ஆலோசனையும் இன்றி மசோதாக்களை கொண்டு வருகிறார்கள். நாடாளுமன்றம் சுமூகமாக நடப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்குதான் பாராட்டு தெரிவிக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்ல எனவும் கூறினார். பாஜகவால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மூலக்கதை