அமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்க வாழ் தமிழர் தன் தந்தையின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு விருது

நினைவில் வாழும் தன் தந்தையின் நினைவாக சென்ற ஆண்டு “நற்றமிழர் ந.க. அறக்கட்டளை” என்று அவர் பெயரில் ஓர் அறக்கட்டளையை மயிலாடுதுறையில் துவங்கியுள்ளார் அமெரிக்க வாழ் தமிழர். அறக்கட்டளையின் முதலாம் ஆண்டுவிழா ஜூலை 13ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேனிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தது. அதன் முதன்மை திட்டமாக மயிலாடுதுறையில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை, நினைவுப்பரிசு வழங்கி பாராட்டத்துவிழா நடந்தது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் திருக்குறள் பேரவை நடத்தி தன் தந்தை செய்த தமிழ்ப்பணியை நினைவில் கொண்டு தமிழில் முதல் மதிப்பெண் பெரும் மாணவ-மாணவர்களுக்கு பரிசுத்தொகை, நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்க தனது தந்தை பெயரில் அறக்கட்டளை நிறுவியுள்ள ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுகள்.. புலம்பெயர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் செயலை போற்றுவோம்.

மூலக்கதை