மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்

தினமலர்  தினமலர்
மேடையில் உயிரிழந்த நகைச்சுவை கலைஞர்

துபாய்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் ஒருவர், துபாயில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது, மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


இந்திய தம்பதியினரின் மகனாக பிறந்த மஞ்சுநாத் நாயுடு(36) என்பவர், துபாயில், நகைச்சுவை கலைஞராக உள்ளார். இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 19) துபாயில் நடந்த நகைச்சுவை கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் மஞ்சுநாத்தும் கலந்து கொண்டார். கடைசியில் மேடை ஏறிய அவர், மறைந்த அவரது பெற்றோரின் கதைகளை கூறி அனைவரையும் சிரித்தார். மன அழுத்தம் பற்றி பேசிய அவர், திடீரென மேடையில் மயங்கி சரிந்தார். இதனை பார்த்த பார்வையாளர்கள் இதுவும், நிகழ்ச்சியில் ஒரு பகுதி தான் என கருதினர். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், அவரை எழுப்பிய போது, மஞ்சுநாத் உயிரிழந்தது தெரியவந்தது. இது அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூலக்கதை