குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்

தினகரன்  தினகரன்
குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனம்

அமெரிக்கா: குழந்தைகள், முதியவர்களுக்கான ஸ்மார்ட் நேப்கின் சாதனத்தை லூமிஸ் ஸ்மார்ட் நேபி என்ற பெயரில் கூகிளின் துணை நிறுவனம் வடிவமைத்து அசத்தியுள்ளது. குழந்தைகளின் நேப்கின்களை எப்போது மாற்ற வேண்டும் என கவனிப்பதிலேயே பெரும்பாலான பெற்றோர்களின் தூக்கம் கலைகிறது. இதே போல் சிறுநீர் கோளாறு உள்ள முதியவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும்  நேப்கின்களை உரிய நேரத்தில் மாற்ற வேண்டும் என்ற படபடப்பு அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கு இருக்கும். இதற்கு தீர்வு காணும்  பொருட்டை கூகிளின் துணை நிறுவனம், ஸ்மார்ட் சாதனத்தை வடிவமைத்துள்ளது. அதை நேப்கினில் பொருத்தினால் எப்போது அதிக ஈரமாகிறது, எப்போது கனக்கிறது, குழந்தை உறங்கிய நேரம் எவ்வளவு, குழந்தைக்கு பால் புகட்டிய நேரம் எத்தனை, எப்போது நேப்கின்களை மாற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தகவல்களை பெற்றோர் அல்லது கண்காணிப்பாளரின் ஸ்மார்ட் போன்களுக்கு அறிவிப்பு அனுப்புகிறது. வைபய், சென்சாருடன் கூடிய இது மறுவேகத்திற்கு உரியதாகும்.     

மூலக்கதை