இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் சிந்து

தினகரன்  தினகரன்
இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் சிந்து

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் ஜப்பானின் நஸோமி ஓகுஹராவுடன் நேற்று மோதிய சிந்து (5வது ரேங்க்) 21-14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-14, 21-7 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 44 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. அரை இறுதியில் 2ம் நிலை வீராங்கனை சென் யூ பெய்யுடன் (சீனா) சிந்து மோத உள்ளார். சென் யூவுடன் மோதியுள்ள போட்டிகளில் சிந்து 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும், ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரின் நடப்பு சாம்பியனான சென் யூ நல்ல பார்மில் இருப்பதால், அரை இறுதியில் சிந்துவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.

மூலக்கதை