இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
இண்டிகோ விமான நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு

குர்கானை: இண்டிகோ விமான நிறுவனத்தின் ஜூன் மாதத்தோடு முடிந்த முதல் காலாண்டின் நிகர் லாபம் 43 மடங்கு அளவாக உயர்ந்து ரூ.1,203 கோடியாக நிலைபெற்று இருக்கிறது. நிறுவனம் தொடங்கிய நாளில் இருந்து தற்போது தான் அதிக லாபம் கிடைத்திருப்பதாக  இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரோனோஜாய் தத்தா தெரிவித்திருக்கிறார். விமான பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு விமான போக்குவரத்து சேவை மூலமாகவும் சுமார் ரூ.9,500கோடி அளவிற்கு வருவாய் அதிகரித்து இருப்பதால் நல்ல லாபம் கிடைப்பதாக அவர் கூறினார். கடந்த ஆண்டில் இதே காலாண்டில், இண்டிகோ நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27.80 கோடியாக இருந்தது. இதே வேகத்தில் லாபம் அதிகரித்தால், நடப்பு நிதியாண்டின் முடிவில், நிறுவனத்தின் நிகர லாபம் 30% அளவிற்கு உயர்ந்திருக்கும் என்று இண்டிகோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. குறைந்துள்ள விமான எரிபொருள் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் நீடிக்கும் நிலைத்தன்மை ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சியும் போட்டி நிறுவனங்களின் சவாலற்ற போக்கும், விமான பயணிகளிடம் குறைந்த கட்டண விமான பயணம் என்று அடையாளம் ஆகியவையே இண்டிகோ நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை