இந்திய பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை

தினமலர்  தினமலர்
இந்திய பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை

நியூயார்க், அமெரிக்க, 'விசா' சட்டங்களை ஏமாற்றி, நுாற்றுக்கணக்கான வெளிநாட்டினரை, சட்ட விரோதமாக குடியேற்றம் செய்த குற்றத்திற்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஹேமா படேல், ௫௧, என்ற பெண்ணுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்காக, ஹேமா படேலின், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, வீடு உட்பட சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; பல கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.நீண்ட காலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வந்த இந்த பெண்ணின் உதவியாளருக்கும், கடந்த ஆண்டு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், அப்போது பறிமுதல் செய்யப்பட்டன.

மூலக்கதை