கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி எதிரொலி குமாரசாமிக்கு கவர்னர் கெடு: இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி எதிரொலி குமாரசாமிக்கு கவர்னர் கெடு: இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் குமாரசாமி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் விவாதத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.  கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதத்தின் மீது விரைந்து முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது  என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை பங்கேற்க கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இடைக்கால தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவை நேற்று கூடியது. ஏற்கனவே அறிவித்தபடி சபாநாயகர் ரமேஷ்குமார், முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன் மீது பேசிய முதல்வர் குமாரசாமி, ‘‘எனக்கு அதிகாரம் மீது பற்றில்லை. பதவி நிரந்தரமல்ல என உணர்ந்துள்ளேன். கூட்டணி அரசின் 13 மாத சாதனையை மக்களிடம் பேரவை மூலம் கொண்டு செல்ல கடமைபட்டுள்ளேன். எனவே கால அவகாசம் பார்க்காமல் விரிவான விவாதத்துக்கு சபாநாயகர்

மூலக்கதை