தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

 டெல்லி உச்ச நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ்,மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார்.  உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மொழி பெயர்ப்பு மூலம் ஆங்கிலம் தெரியாதவரும், தங்களது மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இனி எளிதாகப் படிக்க முடியும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை அனைவரும் எளிதாக படிக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் தமிழ் மொழி இடம் பெற வேண்டும் என ஏற்கனவே பலர் வலியுறுத்தி இருந்தனர். தமிழிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட இருப்பதற்கு வலைத்தமிழ் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது.

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ்,மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக் கொண்டார். 

உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் மொழி பெயர்ப்பு மூலம் ஆங்கிலம் தெரியாதவரும், தங்களது மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இனி எளிதாகப் படிக்க முடியும்.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை அனைவரும் எளிதாக படிக்கலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் தமிழ் மொழி இடம் பெற வேண்டும் என ஏற்கனவே பலர் வலியுறுத்தி இருந்தனர்.

மூலக்கதை