அமெரிக்க அணி பயிற்சியாளராக கிரண் மோரே

தினகரன்  தினகரன்
அமெரிக்க அணி பயிற்சியாளராக கிரண் மோரே

வாஷிங்டன்: அமெரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக, இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பயிற்சியாளராக இருந்து வந்த புபுடு தஸநாயகேவின் (இலங்கை) பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 2019 வரை அவர் பணியில் நீடிக்க அமெரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்திருந்தது. எனினும், கருத்து வேறுபாடு காரணமாக தஸநாயகே ராஜினாமா செய்ததை அடுத்து, இடைக்கால பயிற்சியாளராக கிரண் மோரே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சு ஆலோசகராக முன்னாள் ஸ்பின்னர் சுனில் ஜோஷி (இந்தியா), பேட்டிங் ஆலோசகர்களாக பிரவீன் ஆம்ரே (இந்தியா), கியரன் பாவெல் (வெ.இண்டீஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை