பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ஒரு கப் டீ விலை 14 ஆயிரம்: ராஜ மரியாதையுடன் பரிமாறப்படுகிறது

தினகரன்  தினகரன்
பக்கிங்ஹாம் அரண்மனை அருகே ஒரு கப் டீ விலை 14 ஆயிரம்: ராஜ மரியாதையுடன் பரிமாறப்படுகிறது

லண்டன்: இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் ஒரு கப் டீ இந்திய ரூபாய் மதிப்பில் 14 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் நகரில் மன்னர் குடும்பத்தினரின் அரண்மனை உள்ளது. இதன் அருகே `தி ரூபன்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு பானை டீ 43,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கப் டீயின் விலை 14 ஆயிரமாகும்.`ராயல் ஆப்டர்நூன் டீ மெனு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தேநீரின் விசேஷம் என்னவென்றால், நாம் எந்த சுவை தேநீர் வேண்டுமென்று தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் பின்னரே தேயிலை எடுக்கப்பட்டு, துல்லியமாக எடை போடப்பட்டு, சுத்தமான இயற்கை நீரில் காய்ச்சி வடிகட்டப்பட்டு பின்னர் ராஜ மரியாதையுடன் பரிமாறப்படுகிறது. அதாவது வெள்ளிக்கோப்பையில் இந்த டீ பரிமாறப்படுகிறது. இந்த தேநீரின் ஒரிஜினல் சுவை தெரிய வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் வேறு எந்த உணவையும் உட்கொள்வதற்கு முன்னர் இந்த தேநீரை பருகும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

மூலக்கதை