டிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

தினகரன்  தினகரன்
டிஎன்பிஎல் டி20 சீசன் 4 ஆன்லைனில் டிக்கெட் விற்பனை

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பில்) டி20 தொடரின் 4வது சீசன், ஜூலை 19ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த தொடரின் 28 லீக் ஆட்டங்கள், குவாலிபயர்-1, எலிமினேட்டர், குவாலிபயர்-2 போட்டிகள் நத்தம், திருநெல்வேலி, சென்னையில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி ஆக.15ம் தேதி சென்னையில் நடைபெறும். இதில் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. டிக்கட் கட்டணம் 100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையி–்ல் ஆக. 4ம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெற  உளள இறுதிப் போட்டிக்கான டிக்கட் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்யப்பட்டதும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கும்.

மூலக்கதை