இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் 12 விக்கெட் அள்ளினார் அஷ்வின்

நாட்டிங்காம்: இங்கிலாந்தில் நடந்து வரும்  முதல் டிவிஷன் கவுன்டி கிரிக்கெட் போட்டித் தொடரின் ஒரே டெஸ்டில், இந்திய நட்சத்திரம் ஆர்.அஷ்வின் 12 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்தில்   உலக  கோப்பை பரபரப்புக்கு இடையே முதல் டிவிஷன், 2வது  டிவிஷன் கவுன்டி கிரிக்கெட்  போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த  தொடரில் பங்கேற்கும் நாட்டிங்காம்ஷயர் ஆர்.அஷ்வின் இடம் பெற்றுள்ளார். நாட்டிங்காமில் ஜூலை 13 - 16 வரை  நடந்த முதல் டிவிஷன் கவுன்டி டெஸ்ட் போட்டியில்   நாட்டிங்காம்ஷயர் - சர்ரே அணிகள் மோதின.சர்ரே அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.  அதில் 33.2  ஓவர்கள் வீசிய அஷ்வின் 69 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் 116 ரன்னுக்கு சுருண்டது.  அதில் அதிகபட்சமாக அஷ்வின் 27 ரன் எடுத்தார். 124 ரன் முன்னிலையுடன் 2வது  இன்னிங்ஸ் விளையாடிய சர்ரே அணி 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்தது. இந்த இன்னிங்சிலும் அஷ்வின் 31 ஓவரில் 75 ரன் விட்டுக்கொடுத்து 6  விக்கெட் அள்ளினார். இதைத் தொடர்ந்து 349 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் 181  ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  சர்ரே அணி  167 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. 2வது இன்னிங்சிலும் சிறப்பாக பேட் செய்த அஷ்வின் 66 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை