அடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்: தோனி அணியில் இடம்பெறுவாரா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடுத்து இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் தொடர்: தோனி அணியில் இடம்பெறுவாரா?

மும்பை: இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் இடையே  நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணித் தேர்வு வரும் 19ம் தேதி மும்பையில்  நடைபெறவுள்ள நிலையில், அந்த அணியில் தோனி இடம் பெறுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீஸ்களில் தலா 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் நடக்கின்றன.

ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது.இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு வருகிற 19ம் தேதி மும்பையில் கூடுகிறது. கேப்டன் கோஹ்லி, பவுலர் பும்ரா ஆகியோருக்கு குறுகிய ஓவர்கள் தொடரில் ஓய்வு தரப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம், உலகக் கோப்பையில் விமர்சனத்துக்கு ஆளான முன்னாள் கேப்டன் தோனி, மீண்டும் அணியில் இடம் பெறுவாரா என்பது கேள்வியாக உள்ளது. தோனிக்கும், தேர்வாளர்களுக்கும் இடையே இதுவரை எந்த தகவல் தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து அணியில் ஆட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், பெருவிரல் முறிவால் சிகிச்சை பெற்று வரும் தொடக்க வீரர் ஷிகர் தவானும் அணியில் இடம்பெறுவாரா எனத் தெரியவில்லை.

இருந்தாலும், தற்ேபாது உலகக் கோப்பை அணியில் இடம் பெற வீரர்கள் பெரும்பாலோர் ஓய்வு கோரவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

.

மூலக்கதை