மும்பை திரும்பினார் ரோகித் | ஜூலை 13, 2019

தினமலர்  தினமலர்
மும்பை திரும்பினார் ரோகித் | ஜூலை 13, 2019

 மும்பை: இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா, இங்கிலாந்தில் இருந்து மும்பை திரும்பினார். 

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. இதையடுத்து ஏழு வாரம் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிலர் ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. தவிர, இந்தியா திரும்பியதும், ராஞ்சியில் ‘சீனியர்’ விக்கெட் கீப்பர் தோனி ஓய்வு அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வெளியானதாக கூறப்படும் செய்தியில், ‘‘அரையிறுதி முடிந்ததும் அனைத்து வீரர்களும் லண்டனில் வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். அனைவரும் இன்று லண்டன் வர வேண்டும். பின் ஒன்றாக மும்பை கிளம்ப வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

இருப்பினும் இந்திய அணி துவக்க வீரராக களமிறங்கி, உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட 648 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, இரண்டு நாள் முன்னதாக (12ம் தேதி) தனியாக மும்பை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து தனது காரை அவரே ஓட்டிச் சென்றார். மனைவி ரித்திகா, குழந்தை சமைராவும் உடன் சென்றனர்.  

மூலக்கதை