அகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்?

தினமலர்  தினமலர்
அகிலேஷ் கட்சி ராஜ்யசபா எம்.பி. நீரஜ் சேகர் பா.ஜ.வில் ஐக்கியம்?

புதுடில்லி: முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், சமாஜ்வாதிகட்சி ராஜ்யசபா எம்.பி.யுமான நீரஜ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். உ.பி.யில் பிரதான கட்சியான அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளவர் நீரஜ் சேகர், இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நீரஜ் சேகரின் எம்.பி.பதவி காலம் அடுத்தாண்டு நவம்பரில் நிறைவடைகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து படு தோல்வியடைந்தது. அகிலேஷூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். விரைவில் பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பா.ஜ. மேலி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை