பிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி

தினகரன்  தினகரன்
பிஓகே.யில் கனமழை: 23 பேர் பலி

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் பெருமேகங்கள் வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மிக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலியாயினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மேக வெடிப்பு ஏற்பட்டு மிக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இங்கு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மொத்தம் 23 பேர் பலியாயினர். குழந்தைகளுடன் மக்கள் பலரை இன்னும் காணவில்லை  என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை