பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்

தினகரன்  தினகரன்
பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் சாம்பியன்

லண்டன்: பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் களத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஹாமில்டன் 1 மணி, 21 நிமிடம், 08.452 விநாடியில் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினார். சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (+24.928 விநாடி) 2வது இடமும், பெராரி அணியின் சார்லஸ் லெக்ளர்க் (+30.117) 3வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 10 பந்தயங்களின் முடிவில், ஹாமில்டன் 223 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். வால்டெரி போட்டாஸ் (184), மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (136, ரெட் புல் ரேசிங்), செபாஸ்டியன் வெட்டல் (123, பெராரி), சார்லஸ் லெக்ளர்க் (120) அடுத்த இடங்களில் உள்ளனர்.

மூலக்கதை