கடும் தண்ணீர் பற்றாக்குறையால் உருக்கு ஆலைத் தொழில் பாதிப்பு

தினகரன்  தினகரன்
கடும் தண்ணீர் பற்றாக்குறையால் உருக்கு ஆலைத் தொழில் பாதிப்பு

மும்பை: இந்தியாவில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பல்வேறு தொழிலில்களில் தாக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது. இரும்பு உருக்கு ஆலைத் தொழிலிலும்  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய உருக்கு கம்பிகள் தயாரிப்பு நிறுவனங்களான ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல் ஆகியவை தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் தொழில் நெருக்கடியை சந்தித்து  வருகின்றன.இந்தியாவில் தொழில் போட்டி கடுமையாக இருக்கும் நிலையில் விலை உயர்வு என்பது நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கிறது.  இந்த நிறுவனங்கள் தங்களது தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களான இரும்பு தாது,  நிலக்கரி ஆகியவற்றை கொள்முதல் செய்வதுபோல், தற்போது தண்ணீரையும் சேமித்து வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களான ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், உலோகத் தொழிலில் பிரபலமான வேதாந்தா நிறுவனம் ஆகியவை கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் தங்கள் தொழில் பெரும்  நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளன. பருவமழை பொய்ததால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக்கும் சமீபத்தில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றையும்  வெளியிட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், இந்த நிலையில் இருந்து மாற மழை காலங்களில் மழை நீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது  குறிப்பிடத்தக்கது.தொழில் அபிவிருத்திக்கு மூலப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். இதில் போட்டி நிலவியபோதிலும், தற்போது தண்ணீரும் சேர்ந்துவிட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால் சந்தையில்  பொருட்களை விற்க பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. முன்பு இந்தியாவில் தண்ணீர் தாராளமாகக் கிடைத்ததால், பொருள் உற்பத்திச் ெசலவு குறைவாக இருந்தது. ஆனால், தற்போது தண்ணீரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,  தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது என்று இந்த தொழில் துறையினர் கவலை தெரிவித்தனர்.

மூலக்கதை