பழநி வின்ச் பராமரிப்பு பணி நிறைவு

தினகரன்  தினகரன்
பழநி வின்ச் பராமரிப்பு பணி நிறைவு

பழநி: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள்,  தெற்கு கிரி வீதியில் இருந்து ஒரு ரோப்கார் இயக்கப்படுகிறது. வின்ச் பயண நேரம் 8 நிமிடம். ஒரே முறையில் 36 பேர் வரை பயணிக்கலாம். அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.1ம் எண் வின்ச் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜூன் 2ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் முடிந்து, நேற்று காலை 1ம் வின்ச் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மூலக்கதை