பாதிப்பு! மதுரையில் குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் . . . சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

தினமலர்  தினமலர்
பாதிப்பு! மதுரையில் குழாய் உடைப்பால் குடிநீர் வினியோகம் . . . சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்

மதுரை : மதுரை மாநகராட்சியில் குடிநீர் வழங்கும் வைகை பகுதி 1 திட்ட குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்காக ஜூலை 15 முதல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படவுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநகராட்சிக்கு தேவையான குடிநீரின் பெரும்பகுதி வைகை பகுதி 1, பகுதி 2 திட்டங்கள் மூலம் பெறப்படுகிறது. தினமும் 115 எம்.எல்.டி., வரை கிடைக்கிறது. வைகை அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து பண்ணைப்பட்டி மையத்தில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை கொண்டு வரப்படுகிறது. பண்ணைப்பட்டியில் இருந்து மதுரை வரும் ஆயிரம் மி.மீ., விட்டம் கொண்ட பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

மீனாகண்ணிபட்டி, துவரிமான், கச்சிராயிருப்பில் உடைப்புகள் மூலம் அதிக குடிநீர் வீதிகளில் செல்கிறது. இதை சரி செய்ய ஜூலை 15 முதல் பராமரிப்பு பணி நடக்கவுள்ளது. இதனால் கோச்சடை, பெத்தானியாபுரம், முத்துநகர், பூஞ்சோலைநகர், டோக்நகர், நடராஜ்நகர், முடக்குச்சாலை, மேட்டுத்தெரு, அண்ணா மெயின் வீதி, பல்லவன் நகர், பாண்டியன் நகர், ஐ.என்.டி.யூ.சி., காலனி, கிருஷ்ணராயர் தெப்பம், காக்காத்தோப்பு, குட்ெஷட் தெரு, வடக்கு மாசி வீதி, வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மேல ஆவணி மூல வீதி, கோவிந்தன் செட்டி தெரு, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திடீர்நகர், மேலவாசல், மேல மாசி வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, சுப்பிரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்த்புரம் 1 மற்றும் 2வது மெயின் ரோடு, எம்.சி.சி.,காலனி, விராட்டிபத்து, ஜெய்நகர், கிருதுமால் நகர், சம்மட்டிபுரம், வெள்ளைக்கண்ணு தியேட்டர் நகர், சொக்கலிங்கநகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கமிஷனர் விசாகன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை