ட்வீட் கார்னர்... பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் உற்சாகம்

தினகரன்  தினகரன்
ட்வீட் கார்னர்... பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ ஹாமில்டன் உற்சாகம்

பார்முலா 1 கார் பந்தயத் தொடரின் நடப்பு சீசனில் 10வது பந்தயமாக பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ நாளை நடைபெற உள்ளது. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் மெர்சிடிஸ் அணி வீரரும் நடப்பு சாம்பியனுமான லூயிஸ் ஹாமில்டன் 197 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சக மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் (166 புள்ளி), ரெட் புல் ரேசிங் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (126), பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (123), சார்லஸ் லெக்ளர்க் (105) ஆகியோர் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்களுடன் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹாமில்டன், ‘உங்கள் ஆதரவு பிரமிக்க வைக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை