டைனோசர் வயிற்றில் இருந்த பல்லிக்கு இந்திரன் பெயர்: சீன ஆராய்ச்சியாளர்கள் சூட்டினர்

தினகரன்  தினகரன்
டைனோசர் வயிற்றில் இருந்த பல்லிக்கு இந்திரன் பெயர்: சீன ஆராய்ச்சியாளர்கள் சூட்டினர்

பீஜிங்: சீனாவில் டைனோசரின் வயிற்றில் படிமமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லிக்கு, ‘இந்திரன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிகோ பியோடா என்ற பகுதியில், 12 கோடி ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்த மைக்ரோரேப்டரின் படிமங்கள் அதிகம் உள்ளன. மைக்ரோரேப்டர் என்பது, பறவை போன்ற இறக்கைகள் கொண்ட சிறிய ரக டைனோசர். இவை உணவாக உட்கொண்ட உயிரினங்களும் மைக்ரோரேப்டர் வயிற்றில் இருந்தபடியே படிமங்களாக மாறியுள்ளன. இதுவரை நடந்த 4 ஆராய்ச்சிகளில் மீன்கள், சில உயிரினங்களை மட்டுமே மைக்ரோரேப்டர் படிமத்தில் இருந்தது கண்டறிப்பட்டது. தற்போது, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மைக்ரோரேப்டர் வயிற்றில் ஒரு புதிய ரக பல்லி படிமமாக இருந்தது கண்டறிப்பட்டுள்ளது. இது மற்ற பல்லிகள் போல் இல்லாமல் வித்தியாசமாகவும் உள்ளது.  இதற்கு ‘இந்திராசவ்ரஸ் வாங்கி’ என சீன ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்துள்ளனர். இந்திய வேத கடவுளான இந்திரனின் பெயரும், சீன படிமவியல் பேராசிரியர் வாங் யுவான் பெயரையும் இணைத்து இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை