பெண் எம்.பி.,க்களுடன் மோடி சந்திப்பு

தினமலர்  தினமலர்
பெண் எம்.பி.,க்களுடன் மோடி சந்திப்பு

புதுடில்லி: பா.ஜ., பெண்எம்.பி.,க்களை, பிரதமர் மோடி, தன் வீட்டில், காலை உணவு நேரத்தில், நேற்று சந்தித்து பேசினார்.பார்லிமென்டின், மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பா.ஜ., -எம்.பி.,க்களை சந்தித்து பேச, பிரதமர் மோடி விரும்பினார். இதற்காக, பா.ஜ., - எம்.பி.,க்கள், ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.


எம்பி.,க்களுடன் பிரதமர் நேரடியாக பேசவும், பார்லி.,யில், முக்கிய விவாதங்களில் எப்படி பங்கேற்பது என்பது பற்றியும் அவர்களுக்கு வழிகாட்டவே, இந்த எம்.பி.,க் கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 41 பெண் எம்.பி.,க்களும், பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் நேற்று காலை, சிற்றுண்டி நேரத்தில் சந்தித்தனர்.


மூலக்கதை