நக்சல்களால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் நிர்வாகி சடலமாக மீட்பு

தினகரன்  தினகரன்
நக்சல்களால் கடத்தப்பட்ட டிஆர்எஸ் நிர்வாகி சடலமாக மீட்பு

ஐதராபாத்:  தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோத்தூரை சேர்ந்தவர் சீனிவாச ராவ் (45), அப்பகுதியில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த திங்கட்கிழமை இவருடைய வீட்டில் நுழைந்த 15 பேர் கும்பல்,  துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றது. இந்நிலையில், சீனிவாச ராவ் அண்டை மாநிலமான சட்டீஸ்கரில் உள்ள எர்ராம்பாடு பகுதியில் உள்ள குடிசையில் தலையில் காயம்பட்ட நிலையில் நேற்று பிணமாக கிடந்தார். அவரை கடத்தி கொன்றவர்கள் நக்சல்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள் ளது.

மூலக்கதை