இயக்குநர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
இயக்குநர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: இயக்குநர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஜூன் 21ம் தேதி மாவோயிஸ்ட் அமைப்புகள் உருவாகும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என பாரதிராஜா பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் நாராயணன் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு மீதான விசாரணைக்கு தடை கோரியும் பாரதிராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை