ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் 10 லட்சம் லிட்டர் தண்னீர் கொண்டு வரப்படும்: எஸ்.பி.வேலுமணி

தினகரன்  தினகரன்
ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் 10 லட்சம் லிட்டர் தண்னீர் கொண்டு வரப்படும்: எஸ்.பி.வேலுமணி

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்திற்கு ரயிலில் கொண்டுவரப்பட்டுள்ள தண்ணீர் கீழ்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலையத்தில் சுத்திகரித்து விநியோகிக்கப்படும். 25லட்சம் லிட்டர் குடிநீர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வந்து சேர்ந்துள்ளது; தினமும் ரயில் மூலம் 10 லட்சம் லிட்டர் தண்னீர் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வந்த தண்ணீர் வில்லிவாக்கத்தில் இறக்கப்படுகிறது.

மூலக்கதை