ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை இறக்குவதில் தாமதம்

தினகரன்  தினகரன்
ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை இறக்குவதில் தாமதம்

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தண்ணீரை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வில்லிவாக்கம் வந்த தண்ணீரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் விழா நடத்தி ரயிலில் இருந்து இறக்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் கலந்துகொண்டிருப்பதால் வில்லிவாக்கத்தில் தண்ணீரை இறக்கும் விழா தாமதமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் அதிக நேரம் நிறுத்திவைக்க முடியாதென்பதால் ரயில் கொருக்குப்பேட்டைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை