பைனல் அம்பயர்கள் யார் | ஜூலை 12, 2019

தினமலர்  தினமலர்
பைனல் அம்பயர்கள் யார் | ஜூலை 12, 2019

 லண்டன்: உலக கோப்பை தொடரின் பைனலில் இலங்கையின் தர்மசேனா, தென் ஆப்ரிக்காவின் எராஸ்மஸ் அம்பயர்களாக செயல்படவுள்ளனர்.

உலக கோப்பை தொடரின் பைனல் நாளை, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி பகல் 3:00 மணிக்கு துவங்கும் இப்போட்டிக்கான அம்பயர்கள் அறிவிக்கப்பட்டனர். 

இரண்டாவது அரையிறுதியில் களமிறங்கிய பங்கேற்ற அதே அம்பயர்கள் குழு அப்படியே களமிறங்குகிறது. இதன் படி கள அம்பயர்களாக, இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு, தவறாக அவுட் கொடுத்த  தர்மசேனா (இலங்கை), எராஸ்மஸ் (தெ.ஆப்.,) செயல்படுவர். மூன்றாவது, நான்காவது அம்பயர்களாக ராடு டக்கர் (ஆஸி.,), அலீம் தர் (பாக்.,) இருப்பர். இலங்கையின் ரஞ்சன் மடுகலே, ‘மேட்ச் ரெப்ரி’ செயல்பட உள்ளார்.

மூலக்கதை