துபாய் விபத்து; டிரைவருக்கு தண்டனை

தினமலர்  தினமலர்
துபாய் விபத்து; டிரைவருக்கு தண்டனை

துபாய் : துபாய் சாலை விபத்தில் 17 பேர் பலிக்கு காரணமான பஸ் டிரைவருக்கு தண்டனை வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஓமனில் இருந்து துபாய் சென்ற பயணிகள் பஸ், போக்குவரத்து சிக்னல் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் பலியாகினர். இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த துபாய் போக்குவரத்து கோர்ட், ஒரு மாத விசாரணைக்கு பின் தீர்ப்பு வழங்கி உள்ளது. விபத்து நடந்த பஸ்சை ஓட்டிய டிரைவர், முகமது அலி தமாமி(54) மீது தவறு இருப்பதை உறுதி செய்த கோர்ட், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறை தண்டனை முடிந்ததும், அவரது சொந்த நாடான ஓமனுக்கு அவர் நாடு கடத்தப்படுவார் என உத்தரவிட்டுள்ள கோர்ட், அபராதமும் விதித்துள்ளது. துபாய் நிர்வாகத்துக்கு 13 ஆயிரம் யு.எஸ்., டாலரும், பலியாவர்கள் குடும்பத்துக்கு 92,500 யு.எஸ். டாலரும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை