36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராசர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக உள்ளதாக பொன்.மாணிக்கவேல் புகார்

தினகரன்  தினகரன்
36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராசர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக உள்ளதாக பொன்.மாணிக்கவேல் புகார்

பழனி: 36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராசர் சிலையை மீட்பதில் அரசு அலட்சியமாக உள்ளதாக பொன்.மாணிக்கவேல் புகார் கூறியுள்ளார். கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி கோயிலை சேர்ந்த நடராசர் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிலையை மீட்பதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது என்று பொன்.மாணிக்கவேல் புகார் கூறியுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அதிகாரிகள் சொந்த பணத்தை எடுத்து செலவு செய்து வருகிறார்கள் என்று பழனி கோயிலில் ஆய்வு செய்த பின் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை