அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தல்

சென்னை: அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய 33 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைக்கேடு, சர்ச்சைகளுக்கு இடம் தராமல் மக்களுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை