2000 கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

தினகரன்  தினகரன்
2000 கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

சென்னை: முழு கிராம தொகுப்பு அடிப்படையில் 2000 கிராமங்களில் திருந்திய நெல் சாகுபடி பரவலாக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 2000 கிராமங்களில் தீவிர பயறு வகை சாகுபடி முறையும் பரவலாக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பயறு வகை பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.8.25 கோடியில் 11,000 செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனை, பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள், உயிர் உர உற்பத்தி மையத்திற்கு கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பண்ணைகளில் ரூ.2.50 கோடியில் பழங்கள், காய்கறிகள் பதனிடும் தொழிற்கூடங்கள் ஏற்படுத்தப்படும். கோவை, தேனி, கன்னியாகுமரியில் ரூ.15 லட்சம் மதிப்பில் தரமான சாக்லேட் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை