பராமரிப்பு இல்லா காருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தினமலர்  தினமலர்
பராமரிப்பு இல்லா காருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

துபாய்:வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், பொது இடங்களில், பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படும் கார்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, அந்நாட்டு உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இப்படி நிறுத்தி வைக்கப்படும் கார்களுக்கு, முதலில் 'நோட்டீஸ்' வழங்கப்படும். 15 நாட்களுக்குள், சரி செய்யப்படாவிட்டால், கார் பறிமுதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை