ஆப்கன் கேப்டன் ஆனார் ரஷித் கான்

தினமலர்  தினமலர்
ஆப்கன் கேப்டன் ஆனார் ரஷித் கான்

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டார். டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என, அனைத்து விதமான அணிக்கும், கேப்டனாக அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமனம் செய்துள்ளது. கேப்டனாக இருந்த ஆஸ்கர் ஆப்கன், துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரில், லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் ஆப்கன் அணி தோற்ற நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை