10 ஆண்டில் 27 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு

தினமலர்  தினமலர்
10 ஆண்டில் 27 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு

ஐ.நா : இந்தியாவில் 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா., வளர்ச்சி கழகம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகியன Multidimensional Poverty Index என்ற தலைப்பில் 2019 ம் ஆண்டிற்கான உலக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இதில், 31 குறைந்த வருவாய் கொண்ட நாடுகள், 68 நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், 2 அதிக வருமானம் கொண்ட நாடுகள் என 101 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 1.3 பில்லியன் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். வருவாய் மட்டுமின்றி மோசமான உடல்நலம், மோசமான வேலை, வன்முறை அச்சுறுத்தல் ஆகியவற்றால் அவதியுற்று வருகின்றனர்.

இவற்றில் வங்கதேசம், கம்போடியா, காங்கோ, எத்தியோப்பியா, ஹைதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, வியட்நாம் ஆகிய நாடுகளில் வறுமயைில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்டவை வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளதால் வருமை குறைந்துள்ளது. இவற்றில் இந்தியாவும், கம்போடியாவும் மிக வேகமாக வறுமை அளவை குறைத்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை