தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே முதல் வினாத்தாள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தபால் துறை நடத்தும் தேர்வுகள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. போஸ்ட்மேன், மல்டிடாஸ்கிங் ஸ்டாப், மெயில் கார்ட், போஸ்டல் அசிஸ்டென்ட் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகளை தபால்துறை நடத்திவருகிறது. அந்த தேர்வில் இரு வினாத்தாள்கள் வழங்கப்படும். அந்த வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகள், ஹிந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும். இந்த நிலையில், கடந்த மே 10ம் தேதி இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, நேற்றைய தேதியியல் வெளியான அந்த சுற்றறிக்கையில், ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, இனி நடத்தப்படும் தேர்வுகளில் முதல் வினாத்தாள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழியில் மட்டுமே நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறாது என தெரிவித்துள்ளது. பொதுவாக, தபால்தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது முதல் வினாத்தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், 2ம் தாள் தேர்வு ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மூலக்கதை