ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தியாகு உள்பட 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தியாகு உள்பட 2 பேர் கைது

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியர் அலுவலகம் வருவோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழ்தேசிய விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளர் தியாகு உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரழிப்புக்கு எதிரான கூட்டமைப்பினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை