மும்பையில் கனமழை , பாதாள சாக்கடையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
மும்பையில் கனமழை , பாதாள சாக்கடையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

மும்பை : மும்பையில் கனமழையால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு திறந்து கிடப்பதால் முழங்கால் அளவு நீரில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. 3வயது குழந்தை ஒன்று கோரைக்காவ் பகுதியில் சாலையில் நடந்து செல்லும்போது பாதாள சாக்கடைக்குள் விழுந்துவிட்ட கண்காணிப்பு கேமரா காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது , பலமணி நேரமாக மீட்புக்குழு போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.இதனையடுத்து குழந்தையின் பெற்றோரும் பொதுமக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடையை மூடவும் மின்சார இணைப்புகளை சரிசெய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

மூலக்கதை