கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீதான விவகாரம் : தற்போதைய நிலையே நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீதான விவகாரம் : தற்போதைய நிலையே நீடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகையால் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை  செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தது.

மூலக்கதை