அமைச்சரவை செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு தர வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

தினகரன்  தினகரன்
அமைச்சரவை செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு தர வேண்டும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி அமைச்சரவை செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி அரசுக்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலம், நிதி நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவற்றில் மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது. எனவே, அமைச்சரவையில் அறிவுரை பேரில்தான் ஆளுநர் கிரண்பேடி செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று கூறியுள்ளார்.

மூலக்கதை